அருள்மிகு வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவில் (அ) ஒப்பிலியப்பன் கோவில்
திருநாகேஸ்வரம், கும்பகோணம்
சுவாமி : அருள்மிகு வெங்கடாஜலபதி (ஒப்பிலியப்பன்).
அம்பாள் : அருள்மிகு பூமாதேவி.
மூர்த்தி : மணியப்பன், என்னப்பன், மார்கண்டேயன், இராமர், சீதை, லெட்சுமணன், அனுமார்.
தலவிருட்சம் : துளசி.
தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் இது 13வது திவ்ய தேசமாகும். இந்த திவ்ய தேசம் வைகுந்தம் “தென்திருப்பதி” என அழைக்கப்படும் சிறப்புப்பெற்றது. இத்தல இறைவன் திருப்பதி பெருமாளுக்குத் தமையனார். அதனால் அவரது பிராத்தனைகளை இத்தலத்தில் செலுத்தலாம். இத்தலத்தில் திருக்கல்யாணம், திருமஞ்சனம், பிராத்தனை, கருட சேவை, தங்கரத உலா போன்றவைகளை நிகழ்த்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.
இப்பெருமான் திருவீதிப் புறப்பாட்டின் போது தனியாக செல்வது இல்லை. தாயாருடன் சேர்ந்து செல்வார். தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது. ஒவ்வொரு மாதமும் சிரவனத்தன்று சிரவண தீபம் எடுத்து வலம் வரும் பொழுது பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறப்படுகிறது. 1௦8 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாளுக்கு உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு திருமணங்கள் நிறைய நடக்கின்றன.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரும்மாண்ட புராணத்தில் இக்கோயிலின் வரலாறு இவ்வாறு கூறப்படுகிறது. “மிருகண்ட மகரிஷியின் புதல்வர் மார்க்கண்டேயர்” இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் செய்யும்போது, துளசி செடியின் கீழே சிறு குழந்தையாய் ஸ்ரீ மகாலக்ஷ்மியை கண்ட மார்க்கண்டேயர் குழந்தையை எடுத்து வளர்க்க, பின்பு ஸ்ரீ மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயோதிக பிராமண வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திருவோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டார்.
மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்க மறந்துவிட்டால் நீரோ கோபம் கொள்வீர் என தயங்க...வயோதிக பிராமண வடிவில் வந்த பெருமாள் உம்பெண் உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகாவிஷ்ணு என பின்பு அறிந்து மார்க்கண்டேயர் பெருமாளுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துகொடுத்த தலம் ஆகும்.
பெருமாள் வாக்குக்கிணங்க இன்றும் இந்த சன்னதி பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் ”லவண வர்ஜித வேங்கடேசன்” (லவணத்தினை - உப்பினை விலக்கிய) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் – உப்பிலியப்பன் என்று அழைக்கிறோம். 108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம் கொடுக்கப்படுகிறது.
வழிபட்டோர் : மார்க்கண்டேயர், கருடன், காவிரி.
பாடியோர் : நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் : வைகாசி - வசந்த உற்சவம் 6 நாட்கள்,
ஆவணி-பவித்ர உற்சவம் 5 நாட்கள்,
புரட்டாசி-பிரம்மோற்சவம் 1௦ நாட்கள்,
ஐப்பசி-திருகல்யாண உற்சவம் 12 நாட்கள்,
மார்கழி-இராப்பத்து-பகல்பத்து 20 நாட்கள்,
தை-தெப்பஉற்சவம் 5 நாட்கள்,
பங்குனி-பிரம்மோற்சவம் 12 நாட்கள்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி சுவாமி திருக்கோவில்,
ஒப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம் (அஞ்சல்) - 612 204, கும்பகோணம், தஞ்சாவூர்.
தொலைபேசி எண் : 0435-2463385.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)