அருள்மிகு மாயகூத்தர் திருக்கோவில்

பெருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்

Perungulam_temple

சுவாமி : வேங்கடவானன்(மாயகூத்தர்).

அம்பாள் : அலமேலுமங்கை, குழந்தை வல்லி.

தீர்த்தம் : பெருங்குளம்.

விமானம் : ஆனந்த நிலையம்.

தலவரலாறு : நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி.  நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய  தலம். வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம்  செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு.  பாலிகை  (குழந்தை / தாயார் திருநாமம் கவனிக்க!) தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும்  அழைக்கப்படுகிறது.  இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும்  பகவான் அ‌‌வனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள்.  தேவர்கள்  பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார்.  இத்தலத்தில் கருடன் பெருமாளுடன்  உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார்.

தலவரலாறு : இங்கு வசித்து வந்த வேதசாரண் குமுத வல்லி தம்பதியினரின் தவப்புதல்வியான  கமலாவதி மானிடர் யாரையும் மணந்து வாழ மாட்டேன்.  இப்பெருமாளையே மணம் புரிவேன்  என்று கடும் தவம் கொண்டாள் பெருமாளும் நேரில் தோன்றி அவளின் ஆசைப்படி தன் மார்பில்  எற்றுக் கொண்டார்.  இன்றும் அப்பெருமாளின் நெஞ்சில் கமலாவதியைக் காணலாம்.  இதனால்  தான் பெரும் பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரண் வேங்கடவானுக்கு நித்ய ஆராதனை  செய்து வந்தார்.

இவரின் மனைவி குமுதவல்லி நீராட செல்லும் போது அச்மசாரன் என்னும் அரக்கன் அவளை  கவர்ந்து சென்று இமயத்தில் சிறை வைத்தான்.  இதை அறிந்த வேதசாரன் இங்கு பெருமாளிடம்  அருள்புரிய வேண்டினார்.  பெருமாளும் குமுதவல்லியை இமயமலையிலிருந்து தனது கருட  வாகனத்தில் மீட்டு வந்தார்.  அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர் புரிய அவன் மீது  நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார்.  இதனால் பெருமாளுக்கு ஸோர (அரக்கன்) நாட்டியன்  தமிழில் மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது.  தனக்கு உதவி புரிந்த கருடனுக்கு  உற்சவமூர்த்தியுடன் ஏக ஆசனம் அளித்துள்ளார்.

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்  இரவு 7.30 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோவில் முகவரி : அருள்மிகு மையகூத்தர் திருக்கோவில்,

பெருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் எம். என். ஹெச் ராயல் பார்க்,

எம். என். ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-D, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி 627 001,

Ph : 0462-2320404, 0462-2324617, 0462-2324618, 0462-2324619.


2. ஹோட்டல் அப்லெட் ட்ரீ,

நார்த் பய்பாஸ் ரோடு(பாலம் எதிரில்),

வண்ணாரபேட்டை,

திருநெல்வேலி 627 003,

Ph : (+91) 95 95 333 333.


3. ஸ்ரீ பரணி ஹோட்டல்,

29 - A, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001.


4. ஹோட்டல் எ.எ.ஆர் ராயல் பார்க், 996/1-B,

கிரீன் போரஸ்ட் பர்னிசர் மார்ட் எதிரில்,

வசந்தா நகர்,

நியூ பஸ் ஸ்டாண்ட் அருகில்,

திருநெல்வேலி 627 007,

Ph : 0462 – 2555900.


5. ஹோட்டல் எம்.என்.ஹெச் ராயல் பார்க்,

எம்.என்.ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-டி, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627001.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. மாருதி ரெஸ்டாரன்ட் ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸ்,

மதுரை ரோடு ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462-2331941.


2. ஹோட்டல் நெல்லை சரவண பவன் திருநெல்வேலி ஜங்ஷன்,

டவுன் அண்ட் பாளையம்கோட்டை,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462 233 5917.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
காய்சினவேந்தன
9.3km

விஜயசனபெருமாள
10.1Km

இரட்டை திருப்பதி(ராகு)
6km
இரட்டை திருப்பதி(கேது)
5.7Km
ஆதிநாத பெருமாள்
10.7Km
வைகுந்தநாதன்
11.1Km