அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவில்

ஆதி திருவரங்கம், விழுப்புரம் மாவட்டம்

adhi-thiruvarangam_temple

சுவாமி : ரங்கநாத பெருமாள்.

அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.

தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி , தென் பெண்ணைநதி.

தலவிருட்சம் : புன்னாக மரம்.

விமானம் : சந்தோமய விமானம்.

தலச்சிறப்பு : திவ்ய தேசம் 108 கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.  இவைகள்  அனைத்தையும் விட சிறப்பானது மற்றும் பழமையானது ஆதி திருவரங்கம்.  ஏன் என்றால்  ஆதி திருவரங்கம் திருமாலின் முதல் அவதாரத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.  ஆதி திருவரங்கம்  அடுத்து ஸ்ரீரங்கம் என்ற சொல் இங்கு அணைத்து பகுதிகளிலும் பேசப்பட்டு வருகிறது.   தமிழகத்திலேயே மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர்.  இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட  பெரியவர்.  இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்" என அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு : அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன்  மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான்.   அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது.  பூவுலகையும்,  தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.   முனிவர்களும், தேவர்களும்  தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான்.  அவ்வாறே பூவுலகம், தேவலோகம்  எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு  சேவை செய்யுமாறு பணித்தான்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து  சென்று விட்டான்.  பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன்  நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார்.   நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார்.  இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர்  நடந்தது.  சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான்.   இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி  விட்டான்.

ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில்  சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார்.  மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை  உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார்.   தேவர்களும்,  முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கினார்கள்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி.

அருகிலுள்ள நகரம் : விழுப்புரம்.

கோயில் முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில்,

ஆதி திருவரங்கம் - 605 802, விழுப்புரம் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம்:

1.ஹோட்டல் எஸ். கே.டி.சி

கிராண்ட் பேலஸ் திருகோவிலூர்,

கள்ளக்குறிச்சி மெயின் ரோடு,திருகோய்லூர் டு

கள்ளக்குறிச்சி மெயின் ரோடு, திருகோவிலூர்

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
உலகளந்தபெருமாள் 
20km

கொளஞ்சியப்பர்
82.2Km

விருத்தகிரீஸ்வரர்
79.9Km
வைத்தீஸ்வரன்
85Km
பூவராகசுவாமி
99.3Km
சிதம்பரம் தில்லைகாளி
124Km