ஆதி ஜெகன்னாதப் பெருமாள்

திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம்

Sri-Kalyana-Jagannatha-Perumal_temple

சுவாமி : ஜெகன்னாதப் பெருமாள்.

அம்பாள் : கல்யாணவல்லி.

தீர்த்தம் : ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்.

தலவிருட்சம் : அரசமரம்.

தலச்சிறப்பு : இக்கோவில் திவ்ய தேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும்.  ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்  பெற்றதாகும்.  புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

திருத்தல வரலாறு :  முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்த பெற்றனர்.  மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களை  காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்கு சக்ர தரியாய் அபய முத்ரையுடன் காட்சியளித்து  தன்னை சேவிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சான்னித்யமாய் அருள்  பாலிக்கிறார்.  

தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000  மனைவிகள்  இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜெகன்னாத  பெருமாள் ஒரு  மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நகாபிரதிஷ்டை (அதாவது  இப்போது அந்த  சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின்  புத்ரகமோஷ்டி  யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது. 

இராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலைதாண்டுவதா? யார்  உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன்  வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லக்ஷ்மணன் மடியில் சயனம்(படுக்கை) தலைசாய்த்து  தர்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில்  சிலை வடிக்கப்பட்டுள்ளது.  சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை  இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை.   ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார்.  மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன்,  சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.15 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

பிரம்மோற்சவத் திருவிழா - பங்குனி மாதம் ,

ராமர் ஜெயந்தி திருவிழா - சித்திரை மாதம்,

இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி மற்றும் வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் கூட்டம் பெருமளவில் இருக்கும்.

அருகிலுள்ள நகரம் : திருப்புல்லாணி.

கோயில் முகவரி : அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில்,

திருப்புல்லாணி - 623 532, ராமநாதபுரம் மாவட்டம்.

தொலைபேசி எண் : 814816701 swamynathan(EO)

அருகில் உள்ள தங்கும் இடம்:

1. ஹோட்டல் குயின் பேலஸ்,

என்.ஹெச். ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில்,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 221 013.

 

2. ஹோட்டல் விநாயகா,

#5, ரயில்வே பீடர் ரோடு,

ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 222 361.

 

3. டைவிக் ஹோட்டல்ஸ் ராமேஸ்வரம்,

என்.ஹெச் - 49, மதுரைராமேஸ்வரம் ஹைவே,

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ராமேஸ்வரம் - 623 526,

Ph : 04573 223 222.

 

4. ஹோட்டல் கரிஷ் பார்க்,

3, மதுரை ராமேஸ்வரம் ரோடு,

பாரதி நகர், ராமநாதபுரம் - 623 503.

Ph : 094423 22030.

 

அருகில் உள்ள உணவகள்:

1. ஹோட்டல் ஐஸ்வர்யா லக்ஷ்மி,

கிரௌண்ட் ப்ளோர், என். ஹெச் 45,

மதுரை - ராமேஸ்வரம் ரோடு, சாலை பஜார்.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)  

இருக்குமிடம்
  

 

Nearby Temple

 


மங்களநாத சுவாமி
10.8km 

லட்சுமண தீர்த்தம் 
56.2km

ஹனுமான்
56.3Km

கோதண்டராமன் 
66.9km

ராமசுவாமி
58km