ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமான் கோவில்

குணசீலம், திருச்சி மாவட்டம்

Gunaselam-venkatachalapathi_temple

சுவாமி : ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமாள்.

தீர்த்தம் : காவிரி, பாபவிநாசம்.

தலச்சிறப்பு : குணசீல மகரிஷி பெருமாளை வேண்டி தபசு செய்ததால் பிற்காலத்தில் குணசீலம்  என்ற பெயராயிற்று.  உச்சிகாலத்திலும் அர்த்தஜாமபூஜை இரவு 8.30 மணிக்கு நடைபெற்றதும்,  ஸேவார்த்திகள் முகத்தில் பெருமாள் தீர்த்தம் தெளிப்பார்கள்.  சித்தபிரமை மற்றும் பலதோஷங்கள்  இதனால் தீருகின்றன என்பது ஐதீகம்.  பிரார்த்தனைகளாக சகஸ்ர தீப அலங்காரசேவை,  கருடசேவை, கண்ணாடிஅறை சேவை போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது.

நித்திய உற்சவம் நடைபெறுவதால் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து தரிசிக்கும் பொழுது வாழ்வில்  எல்லா நலன்களையும் பெற்று மோட்சம் பெறுவர்.  முடிகாணிக்கை காதுகுத்துதல் போன்ற  பிரார்த்தனைகளை அய்யர், ராயர், சோழியர், செட்டியார், நாயுடு சமூகத்தினர் இத்தலத்தில் குல  தெய்வமாக வழிபட்டு வேண்டி நிறைவேற்றி வருகின்றனர்.

தலவரலாறு : இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்  என்று அழைக்கப்படுகிறார்.  இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.  தாயாருக்கு என்று தனி சன்னதி  இல்லை.  பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு  காரணம்.  குணசீல மகரிஷி தவம் செய்த இடம் இது என்பதால் இந்த ஊரும் குணசீலம் என்று  அழைக்கப்படுகிறது.  இந்த மகரிஷியின் விருப்பப்படி மகாவிஷ்ணு, பிரசன்ன வெங்கடாஜலபதியாக  இங்கே அருள்பாலித்து வருகிறார்.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.

பூஜைவிவரம் : ஐந்துகால பூஜைகள்.

திருவிழாக்கள் : தெப்பஉற்சவம் -1 நாள், திருப்பவித்ரோத்ஸவம் - 2 நாட்கள், விக்னஸ ஆச்சார்ய  உற்சவத தியாராதனை - 1 நாள், புரட்டாசி சனிக்கிழமைகள் - 5 நாட்கள், பிரம்மோற்சவம் - 16  நாட்கள், தனூர்மாதம் - 30 நாட்களும் திருநாட்கள் கூடாரவல்லி, ஸ்ரீவைகுண்டஏகாதசி.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில்முகவரி : ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமான் கோவில்,

குணசீலம், முசிறிவட்டம், திருச்சி மாவட்டம்.

தொலைபேசிஎண் : 04326 - 275210 , 275310.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

 

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

 

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

 

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

 

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

 

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002. 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 

 

தருகவநேஸ்வரர்
5.5km

ஸ்ரீ அகத்தீஸ்வரர்
8.6km

ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
10.1km

நீலிவனேஸ்வரர்
12.2km

சந்திர கேசவர் 
7.9km

பிரித்யங்கிரா தேவி
11.8km