அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்
காஞ்சிபுரம்
சுவாமி : ஏகாம்பரேஸ்வரர்.
அம்பாள் : காமாட்சி அம்மை(தனிஆலயம்).
தீர்த்தம் : சிவகங்கைதீர்த்தம், கம்பைத்தீர்த்தம், கரஹரதீர்த்தம்.
தலவிருட்சம் : நான்கு வேதங்களையும் ஒருங்கிணைத்த மாமரம். நான்கு வகை சுவை தரும் மாங்கனி நல்கும் தலவிருட்சம்.
தலச்சிறப்பு : காஞ்சி நகரின் உயர்ந்த கோபுரம் ஐந்து பிரகாரங்கள் கொண்டதும் வியத்தகு வகையில் நிலாதுண்ட பெருமாள் என்னும் 108 வைணவ திவ்ய தேசத்துள், ஒரு திவ்ய தேசமும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது.
தேவர்கள், முனிவர்கள், வழிபட்ட சிவத்தலம். மண்ணினால் அமைந்துள்ள சுயம்பு லிங்கதிருமேனிக்கு கவசமணிந்து அபிஷேகங்கள், ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றது. கம்பையாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கையில் ஈசனை ஆரத்தழுவிய அம்பிகையை ஆட்கொண்டு திருமணம் புரிந்ததாக தலபுராணம் தெரிவிக்கிறது. காஞ்சியில் எல்லா சிவ ஆலயத்திலும் தனியாக அம்பாள் சன்னதி கிடையாது. தனியாக கோவில் கொண்ட காமாட்சி அம்மை ஆலயமாக சக்தி திருக்கோவில் ஆகும்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மன் தன்னுடைய வம்சத்தில் பிறந்து இறந்த அசுரர்களை மீண்டும் உயிர்பித்து வரங்கள் அள்ளித்தர முடிவெடுத்தான்.அதற்காக காஞ்சியில் அருந்தவம் மேற்கொண்டான்.அவனின் காவலுக்கு மது-கைடபர் எனும் இரு அசுரர்களை உருவாக்கினான்.இதை தடுக்க நினைத்த பராசக்தி,தனது மாயையினால் மஹாவிஷ்ணுவின் வடிவம் கொண்டாள்.அந்த இரு அசுரர்களும் மகாவிஷ்ணு என்று எண்ணி பணிந்தனர்.அன்னை தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவினாள்.அது மது-கைடபரின் கைகளை அறுத்தது. பிரம்மதேவனின் தவம் கலைந்தது,இதனால் கோபம் கொண்ட பிரம்மன் அந்த மாய விஷ்ணுவை நெருங்கி,தன் பிரம்மாஷ்திரத்தை பயன்படுத்த முயன்றான்.விஷ்ணுவாக வடிவத்தில் பராசக்தி,பிரம்ம தேவனே உன் காவலாளிகளை கொன்றது உருத்திர மூர்த்தி(சிவன்)தான் என்று சொல்லி ,உன் பின்புறத்தில்தான் ஓடுகிறார் என்று சொல்ல பிரம்மன் திரும்பிய சிறுபொழுதுக்குள்,பராசக்தி ருத்ரமூர்த்தியின் வடிவம் தாங்கி வடக்கு திசையில் ஓடினாள்.பிரம்மன் மிகவும் குழப்பமுற்று நின்றான்.அந்த நாள் முதல் வடக்கு திசையில் காட்சி தந்த சிவ வடிவானது ஆம்பர விருஷ(மாமரம்) ரூபமாய் மாறி ஏகம்பரம் ஆனது.அங்கே ஏகம்பரநாதனுக்கு ஒரு கோவில் எழுந்தது.தென் திசையில் காட்சி தந்த திருமால் வரதராஜ மூர்த்தியாக கோவில் கொண்டனர் என்பதாகவும் வரலாறு உண்டு.
நடைதிறப்பு : காலை 6.00 மணிமுதல் 12.30 மணி வரை.மாலை 4.00 மணிமுதல்இரவு 8.30 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்
கோயில் முகவரி : அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்-631501.காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி எண் : 044-27222084.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,
487, காந்தி ரோடு,
காஞ்சிபுரம் - 631 502,
+(91)-44-27225250, +(91)-9940184251.
2. எம். எம் ஹோட்டல்,
No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631 502,
Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.
3. ஹோட்டல் பாபு சூர்யா No. 85,
ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,
காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,
காஞ்சிபுரம் - 631 501,
Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. சரவண பவன் 66,
அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631502,
Ph : 4427226877.
2. ஹோட்டல் சரவண பவன் 504,
காந்தி ரோடு,
இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,
காஞ்சிபுரம்
3. ஹரிடம் என்.ஹெச் - 45
தென்பாக்கம் கிராமம்,
காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)