அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆலயம்

கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்

Koothanur-saraswathi_temple

சுவாமி : சரஸ்வதி.

தலச்சிறப்பு : கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் இத்தலம் தட்சிணதிரிவேணிசங்கம் எனப்  பெயர் பெற்றது.  இவ்வூர் இரண்டாம் ராஜராஜ சோழனால் தனது அவைப்புலவரான  ஓட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தனூர் என்றாயிற்று.  கும்பகோணம்  சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனூர் அம்பிகை அருளால்  விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி  எனப் போற்றப்பட்டதும் அண்மை கால வரலாறுகள் கூறுகின்றன.  இத்தலத்தில் அருள்பாலித்து  வரும் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுவோர்க்கு கல்வி அறிவு பெற்று மேன்மை அடைவர்.   தமிழ்நாட்டிலேயே ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு இத்திருக்கோவில் ஒன்று மட்டுமே உள்ளது.

தல வரலாறு : கூத்தனூர் சரஸ்வதி ஆலய தல புராணம் சகோதர சகோதரி மணம் புரிவதற்கான பண்பாட்டுத் தடையினைப் பேசுகிறது.  சத்திய லோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது, கல்விக்கரசியான  தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்  தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி  இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து விட்டனர்.  இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில்  புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற  மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட  ஆரம்பித்தனர்.  அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.   சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர்.   பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது.  அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை  நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர்.  சிவபெருமான் அவள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம்.   எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு.  இங்கு வரும் பக்தர்களுக்கு  கல்விச்  செல்வத்தை வழங்கு" என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர்  ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.

நடைத்திறப்பு : காலை 7.30 மணி முதல் 1.00 மதியம் மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு  8.30 மணி வரை.

பூஜைவிவரம் : ஒரு கால பூஜை.

திருவிழாக்கள் : நவராத்திரியில் சரஸ்வதி பூஜை-விஜயதசமி முக்கிய திருவிழாவாகும்.

அருகிலுள்ள நகரம் : திருவாரூர். 

கோயில்முகவரி : அருள்மிகு சரஸ்வதி அம்மன் ஆலயம்,

கூத்தனூர் பூந்தோட்டம் - 609 503, திருவாரூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04366-239 909.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1. சுவாதி லாட்ஜ் அண்ட் ஹோட்டல்,

ஸ்டேட் ஹைவே 23,

சுவாதி லாட்ஜ்,

பேரளம்,

தமிழ்நாடு - 609405,

Ph:095004 27752.

 

2. மங்களா ஹெரிடேஜ் ஹோம்,

மிட மட வில்லாகம் ஸ்ட்ரீட்,

திருப்புகலூர் கிராமம்,

நாகப்பட்டினம்.

 

3. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட்,

2, கட்டுகார ஸ்ட்ரீட்,

சந்தமங்களம்,

திருவாரூர் - 610 002,

Ph : 04366 222 082.

 

4. அருண் ஹோட்டல்,

சந்தமங்களம்,

கே.டி.ஆர். நகர்,

திருவாரூர்,

தமிழ்நாடு - 610 001.

 

5. ஹோட்டல் எம்.எம்.எ,

டாக்டர் கலைஞர் நகர்,

மன்னார்குடி ரோடு,

டி.நகர், விளாமல்,

திருவாரூர் - 610001,

Ph:04366 220 218.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
சுயம்பு நாத சுவாமி  
4.8km

லலிதாம்பிகை 
6.1Km

அதிசேஷ தீர்த்தம் 
12.5Km
சனி-திருநள்ளாறு
21.2Km
அக்னீஸ்வரசுவாமி 
13.6Km
ராமநாத சுவாமி 
15.1Km