அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
வயலூர், திருச்சி மாவட்டம்
சுவாமி : சுப்பிரமணிய சுவாமி
அம்பாள் : வள்ளி,தெய்வானை
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
தலவிருட்சம் : வன்னி மரம்
தலச்சிறப்பு : அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன்வேலினால் ஓம் என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய தலம்.அக்னிதேவன்,அருணகிரிநாதர்திருமுக கிருபானந்த வாரியார் ஆகியோர் போற்றி வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்,குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகுநிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது. கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.
தல வரலாறு : இத்திருக்கோயில் உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னர்களால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இத்திருக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்.
சோழமன்னர்கள் இப்பகுதிக்கு வந்து வேட்டையாடும்போது தாகம் எடுக்க மூன்று கிளைகளாக அமைந்து வளர்ந்திருந்த ஒரு கரும்பினை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி ஒடித்த போது கரும்பிலிருந்து உதிரம் கசிய அவ்விடத்தை தோண்டியபோது கரும்பு வளர்ந்த அடிப்பகுதியில் சிவலிங்கம் தென்பட்ட, உடன் மன்னர் இத்திருக்கோயிலினை அமைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தார்.இத்தலத்தின் ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரக சுவரில் 20 கல்வெட்டுக்கள் உள்ளன. சித்தர்கள் தேடிவந்து முக்தி அடையும் இடம் வயலூர் முருகன் சன்னதி ஆகும்.
கல்வெட்டுக்கள் : ஆதிநாதர் சன்னதி கர்ப்பகிரகத்தின் சுற்றுச்சுவரில் 20 கல்வெட்டுக்கள் (1937, 138-157) உள்ளன.
கலைகள் மற்றும் கட்டிடக்கலை : இத்திருக்கோயிலின் கல் தூண்கள் மற்றும் கற்சுவர்களில் அமைக்கப்பெற்ற கலைகள் மற்றும் கட்டிடக்கலைகள் அனைத்தும் சோழமன்னர்களால் உயிர் உள்ளவன போல அமைக்கப்பெற்றுள்ளது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
தேர்கள் : சிறிய சட்டத்தேர் ஒன்று மட்டும் உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று இத்தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
மண்டபங்கள் : வசந்த மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதி மாடி மண்டபம் ஆகியவை உள்ளன.
நடைதிறப்பு : காலை 6.00-1.00, மாலை 3.30-9.00
திருவிழாக்கள் : வைகாசி விசாகப்பெருவிழா,
கந்த சஷ்டி பெருவிழா,
தைப்பூசம்,
பங்குனி உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : திருச்சி
கோயில் முகவரி : அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், குமாரவயலூர், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1.ஹோட்டல் சங்கம்,
கலெக்டர் ஆபிஸ் ரோடு, ராஜா காலனி,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
Ph : + 91-452-4244526.
2.ஹோட்டல் மாயாஸ்,
சத்திரம் பஸ் ஸ்டாண்ட்,திருச்சி - 2.
Ph: 2705717
3.பெமினா ஹோட்டல்
109, வில்லியம்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம், ரெயில்வே ஜங்ஷன்
Ph: 0431 - 2414501.
4.எஸ்.ஆர்.எம் ஹோட்டல்,
ரேஸ் கோர்ஸ் ரோடு,
காஜாமலை.
5.கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன், திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000.
Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.ஸ்ரீ சங்கீதாஸ்,
No. 2, வீ.ஓ.சீ ரோடு, மத்திய பேருந்து நிலையம் எதிரில்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 002.
2.ஏழாம் சுவை,
கலெக்டர் ஆபீஸ் ரோடு, கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
3.விஜய் புட் கோர்ட்,
9, ரெனால்ட்ஸ் ரோடு,
ரிலையன்ஸ் மார்ட் மடியில், கண்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 001.
4.டிமோரா,
No B 29 & 30, 4th ப்ளோர், அம்பிகை சிட்டி,
சாஸ்த்ரி ரோடு, தென்னூர்,
திருச்சிராப்பள்ளி, திருச்சி - 620 018.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)