அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்
திருவாலம் பொழில், தஞ்சாவூர் மாவட்டம்
சுவாமி : ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர்.
அம்பாள் : ஞானம்பிகை.
மூர்த்தி : சுப்பிரமணியர், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி தெய்வானையுடன் முருகர்.
தீர்த்தம் : காவிரி.
தலவிருட்சம் : ஆலமரம்( தற்போது இல்லை), வில்வம்.
தலச்சிறப்பு : தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 10வது தலம் ஆகும். இத்தலத்தில் 5 நிலை கோபுரத்தை கொண்டுள்ளது. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
இத்தலத்தில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், காசி விசாலாட்சி, நடராஜர் சந்நிதிகள் உள்ளன. காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்ட தலம். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாக கருதப்படுகிறாள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இந்திரன் இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றான். நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய திருத்தலம் ஆகும். இத்தல இறைவனை வழிபடுவதால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும், கல்வி சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. இவ்வூர் ஆலம்பொழில் என்னும் பெயர் மருவி திருவாலம் பொழில் என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு : இத்தலக் கல்வெட்டில் ஆத்மநாதேஸ்வரர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பர் தம் திருத்தாண்டகத்தில் "தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே” என்று பாடியுள்ளார். எனவே இந்த ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.
வழிபட்டோர் : காசிபர், அஷ்டவசுக்கள்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் :
ஆவணி மூலம்,
சஷ்டி,
நவராத்திரி,
கார்த்திகை சோமவாரங்கள்,
சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
ஐப்பசி அன்னாபிஷேகம்.
அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் முகவரி : அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருவாலம் பொழில் அஞ்சல், திருப்பந்துருத்தி - 613 103. வழி - திருக்கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சங்கம் ஹோட்டல்,
தஞ்சாவூர்,
திருச்சி ரோடு,
தஞ்சாவூர் - 613 007,
Ph : 91-4362-239451.
2. ஹோட்டல் பரிசுத்தம்,
55 ஜி.ஏ. கானல் ரோடு,
தஞ்சாவூர் 631 001,
Ph : 04362 231 801.
3. ஹோட்டல் ஞானம் அண்ணாசாலை(மார்க்கெட் ரோடு),
தஞ்சாவூர் 631 001,
Ph : 04362- 278501-507.
4. ஹோட்டல் பாலாஜி இன் 81,82,83,
பாஸ்கர புரம்,
நியூ பஸ் ஸ்டாண்ட்,
தஞ்சாவூர் - 613 005,
Ph : 04362-226949/227949.
5.ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,
கலெக்டர் ஆபீஸ் ரோடு,
நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,
அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,
மதுரை - 625 020,
Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ஹோட்டல் ராம்நாத்,
தெற்கு ராம் பார்ட் பழைய பேருந்துநிலையம்,
எண் 1335, தஞ்சாவூர் - 613 001
Ph : +(91)-4362-272567, +(91)-9362610901.
2. ஸ்ரீ லஷ்மி நாராயணன் பவன்,
எண் 133, பெரிய வீதி,
தஞ்சாவூர் - 613001,
பட்டுகோட்டை
Ph : +(91)-4362-252358.
3.கார்த்திக் உணவகம்
எண் 1334,தஞ்சாவூர் ஹெச்.ஓ - 613001,
தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்
Ph : +(91)-4362-278662, 278663, 278322.
4.ஹோட்டல் காபி பிளாசா
எண் 1465, தஞ்சாவூர் - 613001,
தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்
Ph : +(91)-4362-231358.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)