ஸ்ரீ வீரபத்ரர் சுவாமி திருக்கோவில்
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்

 

 

 

 

சுவாமி : ஸ்ரீ வீரபத்ர சுவாமி.

தலச்சிறப்பு : சிவபெருமானின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும் வியர்வையிலிருந்து பிறந்தவர்  என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய கருத்துக்கள் நிலவுகின்றன.  ஆனால் வீரபத்திரர்  சிவாம்சம் என்றே பொதுவான கருத்து நிலைபெற்று உள்ளது.  வீரபத்திரப் பெருமானின் அவதார  நோக்கங்கள் தர்மம் தவறியவரை, இறைவனை மதியாது தாமே என்று இறுமாப்புக்  கொண்டவர்களை அழிப்பதாகும். வைணவர்களுக்கு நரசிம்மாவதாரம் போன்று, சைவர்களுக்கு  வீரபத்திர அவதாரம் அமைகின்றது.

வீரபத்திரர் வெளித்தோற்றத்தில் உக்கிரமாக காட்சியளித்தாலும், அவர் மிகவும் குளிர்ச்சியான  உள்ளம் படைத்தவராக உள்ளார் என்பதை அவரது உடலில் உள்ள ஜீவராசிகளும் காட்டி  நிற்கின்றன.  குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாக  அமைந்துள்ளன.  சிலந்திப்பூச்சி, பதின்நான்கு பாம்புகள் அங்கங்கள் தோறும் ஆபரணமாக  அமைந்துள்ளன.  இந்த அமைப்பு இயற்கையுடன் இணைந்த தெய்வீகத் தோற்றமாகவும்,  குளிர்ச்சியின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளன.

வீரம் என்பது பல்திறப்படும்.  தன்னைத் தான் வெல்வதே பெரு வீரம் என்றும் கொள்வர்.  இத்தகு ஆன்மபலமாகிய வீரத்திற்கும் வீரபத்திர வணக்கம் துணை செய்யும் எனலாம்.  செவ்வாய்க்கிழமைகளில், பரணி நாட்களில், அஷ்டமித் திதிகளில் வீரபத்திரருக்கு சிறப்பு  வழிபாடுகள் நடைபெறுகின்றன. தும்பைப்பூமாலை சாற்றியும் வெண்ணெய் அணிவித்தும்  வீரபத்திரரை வழிபடுகின்றனர்.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல்  இரவு 08.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோவில்,

கும்பகோணம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். 

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2. சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3. குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4. ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5. ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
ஆதிகும்பேஸ்வரர் 
1.2km

சாரங்கபாணி 
1.2km

காசி விஸ்வநாத சுவாமி 
190m
பகவத் விநாயகர் 
750m
நாகேஸ்வர சுவாமி 
500m
சோமேஸ்வர சுவாமி 
1km