அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்
பாடி, சென்னை
சுவாமி : திருவல்லீஸ்வரர், திருவலிதாய நாதர்.
அம்பாள் : ஜெகதாம்பிகை, தாயம்மை.
தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம்(திருக்குளம்).
தலவிருட்சம் : கொன்றை, பாதிரி.
தலச்சிறப்பு : இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றார். அதனால் சென்னையில் உள்ள ஓர் குரு தலமாகவும் திகழ்கிறது. திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம். அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலம்.
தல வரலாறு : திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது. வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள். பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம். எனவே தான், இத்தலம் "திருவலிதாயம்" என்றும் சிவன் "வலியநாதர்" என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.
வழிபட்டோர் : அகஸ்தியர், பரத்வாஜ முனிவர், வலியன், குரு பகவான், சூரியன், சந்திரன், இமயன், அக்கினி ஸ்ரீராமர் அனுமன் ஆகியோர் வழிபட்ட தலம்.
பாடியோர் : திருஞானசம்பந்தர்
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
சித்திரை - பிரம்மோற்சவம்,
தை - கிருத்திகை,
குரு பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
அருகிலுள்ள நகரம் : சென்னை.
கோயில் முகவரி : அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்,
பாடி, சென்னை - 600 050.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)