ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பிகா உடனாய ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோவில்
கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர்
சுவாமி : ராமநாதசுவாமி.
அம்பாள் : ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பிகா.
மூர்த்தி : சனிபகவான், மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, மாந்தி, குளிகன்.
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தலச்சிறப்பு : ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பிகா உடனாய ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோவில், சனிதோஷப் பரிகாரத்தலம் ஆகும். சனிக்கிழமைகளில் ஈசனையும், அம்பாளையும் வணங்கி, குடும்பத்துடன் காட்சியருளும் சனிபகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட, மந்தபுத்தி விலகும். தோஷம் நிவர்த்தியாகும். ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பிகா உடனாய ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோவிலில் சனிபகவான் தன்மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேதராய் தன் இருமகன்களான ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி, காலத்தின் அதிபதியான குளிகன் இவர்களோடு காட்சியருளுகிறார். கருவறையில் எண்ணைதீபம் நிறைய ஏற்றச்செய்யுங்கள்.
பரிகாரம் : அஷ்டமத்துசனி, ஏழரைசனி நடப்பவர்கள், எட்டு சனிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டால் சனியின் தோஷம் விலகும்.
தல வரலாறு : தஞ்சாவூர் கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பிகா உடனாய ஸ்ரீராமநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்தலத்தில் தனிச் சன்னதியில் சனி பகவான் தன் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டா தேவி, தன் இரு மகன்களான மாந்தி, குளிகன் ஆகியோருடன் சேர்ந்து குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் தசரத சக்கரவர்த்தி தன் நோய் குணமடைய இந்த ஆலயம் வந்து, சூரிய தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டு குணம் அடைந்தார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் தசரதரின் சிலை இங்கே அமைந்துள்ளது. குடும்பத்துடன் அருள்புரியும் இந்த சனி பகவானை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
வழிபட்டோர் : தசரத சக்கரவர்த்தி.
நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை .
திருவிழாக்கள் : சனிப்பெயர்ச்சி திருவிழா.
கோயில் முகவரி : ராமநாதசுவாமி திருக்கோவில்,
நாச்சியார்கோவில், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் .
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)