அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் 

ஆனைமலை, கோயம்புத்தூர் மாவட்டம்

Aanamalai-Masaniamman_temple


சுவாமி : மாசாணியம்மன் (மயானசயனி )

தீர்த்தம் : கிணற்றுநீர் தீர்த்தம்

தலச்சிறப்பு : உப்பாற்றின் வடகரையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி மேலே நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். சீதையை மீட்கச் சென்ற ஸ்ரீராமர், இந்த அம்மனை வணங்கி அருள் பெற்றுச் சென்றுள்ளது சிறப்பு.

தல வரலாறு : பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான். அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும் கட்டளையிட்டிருந்தான். ஓருநாள், ஆழியாற்றில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி, ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள். இதையறிந்த மன்னன், அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான். ஊர்மக்கள் எதிர்த்தனர். ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான். வருத்தம் கொண்ட மக்கள் மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி, அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர். காலப்போக்கில் அவளே ஊர்காக்கும் அம்மனாக இருந்திட, மக்கள் இவ்விடத்திலேயே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
 
நடைதிறப்பு : காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : தை மாதத்தில் 18 நாள் திருவிழா நடைபெறுகிறது. அமாவாசை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

அருகிலுள்ள நகரம் : பொள்ளாச்சி

கோயில் முகவரி : அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை, பொள்ளாச்சி - 642104, கோயம்புத்தூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 04253 282 337, 283 173.

அருகில் உள்ள தங்கும் இடம் :
1.கோகோ லகூன் பை கிரேட் மவுண்ட் ரிசோர்ட்,

வாழைகொம்பு,

நாகூர், மீன்கரை ரோடு,

பொள்ளாச்சி - 642 103,

Ph : +91-4259-297058, 8344200200, 8344300300.

 

2.சக்தி ரிவர் ரிசோர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

சுப்பு கௌண்டன் புதூர் பிரிவு,

பொள்ளாச்சி டு திருச்சூர் ஹைவே,

பொள்ளாச்சி.

 

3.டைகர் ஹில்ஸ் ரிசோர்ட்,

எண் 1 டாப் ஸ்லிப் மெயின் ரோடு,

செதுமடை,

பொள்ளாச்சி.

 

4.காஸ்ட் டாப்ஸ்லிப்,

மினோர் படி,

பாரஸ்ட் செக்போஸ்ட்,

சேதுமடை(டாப் ஸ்லிப்),

பொள்ளாச்சி - 642 133.

 

5.வெஸ்டன் காட்ஸ் விலாஸ்,

30, டாப் ஸ்லிப் ரோடு,

சேதுமடி,

பொள்ளாச்சி - 642 133.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.தி ஸ்லவேஸ் ரெஸ்டாரன்ட்ஸ்,

பொள்ளாச்சி.

 

2.சக்தி ஹோட்டல்,

144, கோயம்புத்தூர் மெயின் ரோடு,

பொள்ளாச்சி - 642 002.

 

3.முதுரம் கபே அண்ட் ஹோட்டல்,

அங்காளகுருச்சி,

பொள்ளாச்சி டு ஆளியார் / வால்பாறை என்.ஹெச்,

பொள்ளாச்சி - 642 007.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

தென்சேரி மலை 
45.9km
பழனி முருகன் 
77.7km