அருள்மிகு பவளவல்லி தாயார் உடனுறை பவளவண்ணர் திருக்கோவில்
காஞ்சிபுரம்
சுவாமி : அருள்மிகு பவளவண்ணர்.
அம்பாள் : பவளவல்லி.
விமானம் : ப்ரவள விமானம்.
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்.
தலச்சிறப்பு : இங்குள்ள திருமால் பொன்நிறமேனியுடன் காட்சி தருவது தனி சிறப்பு.
தல வரலாறு : ஒரு சமயம் வைகுந்தத்தில் திருமகளும், திருமாலும் அருகருகே அமர்ந்து ஆனந்தத்துடன் பேசிக் கொண்டு இருந்த போது திருமகள், திருமாலை நோக்கி, காத்தல், அருளல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் நடத்தும் சிவபெருமான் அருள்பெற்று தாங்கள், தங்கள் மேனியைப் பொன்னிறமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தாள். இதைக் கேட்ட கார்வண்ணர் தேவி அப்படியே செய்கிறேன் எனக் கூறி, உன் விருப்பப் படியே பொன்னிற மேனிகொண்டு திரும்புவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
வைகுந்தத்திருலிருந்து புறப்பட்ட திருமால் கச்சித் திருத்தலத்தை அடைந்து வீரட்டகாசத்தின் முன்பு தன் சக்கர ஆயுதத்தால் அழகிய தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார். தினமும் சக்கர தீர்த்தத்திலே நீராடி, 14000 தாமரை மலர்களைக் கொண்டு வந்து அவற்றால் வீரட்டகாசரை வழிப்பட்டார். திருமாலின் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஈசன், தாய் உமையுடன் திருமாலுக்குக் காட்சிக் கொடுத்து பச்சை மேனியனே, உன் எண்ணத்தை யாம் அறிவோம் கவலை வேண்டாம், பவளம் போன்ற செந்நிறமேனியை உனக்குத் தந்தோம், என்று அருளினார்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.
கோவில் முகவரி : அருள்மிகு பவளவல்லி தாயார் உடனுறை பவள திருக்கோவில்,
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஜி.ஆர்.டி ரெசிடென்சி காஞ்சிபுரம்,
487, காந்தி ரோடு,
காஞ்சிபுரம் - 631 502,
+(91)-44-27225250, +(91)-9940184251.
2. எம். எம் ஹோட்டல்,
No. 65 - 66, நெல்லுகார ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631 502,
Ph : +(91)-44-27227250, +(91)-8098827250.
3. "ஹோட்டல் பாபு சூர்யா No. 85,
ஈஸ்ட் ராஜா ஸ்ட்ரீட் காஞ்சிபுரம்,
காமாட்சி அம்மன் கோவில் எதிரில்,
காஞ்சிபுரம் - 631 501,
Ph : +(91)-44-27222556, +(91)-9597121214.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. சரவண பவன் 66,
அன்னை இந்திரா காந்தி ஸ்ட்ரீட்,
காஞ்சிபுரம் - 631502,
Ph : 4427226877.
2. ஹோட்டல் சரவண பவன் 504,
காந்தி ரோடு,
இந்தியன் ஓவர்சிஸ் பாங்க எதிரில்,
காஞ்சிபுரம்
3. ஹரிடம் என்.ஹெச் - 45
தென்பாக்கம் கிராமம்,
காஞ்சிபுரம் - 603301, Ph :044 27522336.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)