அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 

திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்

Thiruparamkundram_temple


சுவாமி : சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் : தெய்வானை

தீர்த்தம் : சன்னியாசி தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம்,சரவண பொய்கை,சத்ய கூபம் உட்பட 11 தீர்த்தங்கள்

தலவிருட்சம் : கல்லத்தி

தலச்சிறப்பு : முருகனின் அறுபடைவீடுகளில் இதுவே முதல் வீடு.இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடைவீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுவது இன்னொரு சிறப்பு.

தல வரலாறு : முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளை அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

பாடியோர் : நக்கீரர், அருணாகிரி நாதர், சுந்தரர், மாணிக்கவாசகர் 

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

அருகிலுள்ள நகரம் : மதுரை 

கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் - 625 005, மதுரை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. போர்டுன் பாண்டியன் ஹோட்டல் ரேஸ் கோர்ஸ்,

மதுரை - 625 002,

Ph : 91-452-4356789.

2. தி எஸ்.பி.கே ஹோட்டல் லக்சுரி லக் வியூவ் ரோடு,

மானகிரி,

கே.கே நகர்,

மதுரை - 625 020,

Ph : 0452 255 5777.

 

3. ஹெரிடேஜ் மதுரை,

11, மேலக்கல் மெயின் ரோடு,

கோச்சடை,

மதுரை - 625 016,

Ph : + (91) 452 2385455 , +(91) 452 3244185.

 

4. சங்கம் ஹோட்டல்,

மதுரை அழகர்கோயில் ரோடு,

மதுரை - 625 002,

Ph : 91-452-4244555 / 2537531.

 

5. ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,

கலெக்டர் ஆபீஸ் ரோடு,

நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,

அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,

மதுரை - 625 020,

Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ஹோட்டல் சுப்ரீம்,

எண். 110, வெஸ்ட் பெருமாள் மிஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : 0452 234 3151.

 

2. சூர்யா ரூப் டாப் வெஜ் ரெஸ்டாரன்ட்,

110, வெஸ்ட் பெருமாள் மைஸ்ட்ரி ஸ்ட்ரீட்,

மதுரை - 625 001,

Ph : +91 452 2343151, 3012222.

 

3. அடையார் அனந்த பவன்,

285, காமராஜர் ரோடு,

மஹால் ஏரியா,

மதுரை மெயின்,

மதுரை - 625 009,

Ph : 044 2345 3045.

 

4. ஸ்ரீ மோகன் போஜநளாய்,

எண் 33, தனப்பா முதலி ஸ்ட்ரீட்,

மதுரை ஹெச்.ஓ,

மதுரை - 625 001,

டெம்ப்ல் வியூ எதிரில்,

Ph : +(91)-9943323221, 9442751870, +(91)-452-2346093.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

அழகர்கோயில்
7.8km

இன்மையிலும் நன்மை தருவார்
7.1km

பழமுதிர்சோலை
33.9Km
கூடலழகர்
6.8Km