ஆலந்துறையார் திருக்கோவில்

கீழபழூர், அரியலூர் மாவட்டம்

aalandhuraiyar_temple


சுவாமி : ஆலந்துறையார், வடமூல நாதர், யோகவனேஸ்வரர்.

அம்பாள் : அருந்தவ நாயகி, யோகத பஸ்வினி, மகாதபஸ்வினி.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம்.

தலவிருட்சம் : பழு ஆல்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் இறைவன் தானாக தோன்றியுள்ளார் (சுயம்பு லிங்கம்).  அன்னை உமையவள் உலக உயிரினங்களின் நலனுக்காக ஒரு காலில் நின்று தவம் செய்கிறாள்.  இறைவன் புற்று மண்ணாக இருப்பதால் பஞ்ச பூதங்களில் மண் தத்துவத் தலம்.  சண்டீசர் சிவபூஜை செய்யும் பஞ்சலோக அரிய வடிவம். இங்கு தான் பரசுராமன் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்கி இறைவன் அருள் பெற்றான்.  கருவறை வாயின் மேல்நிலையில் பரசுராமன் சயன வடிவம் உள்ளது.  பங்குனி 18-ஆம் நாள் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுகிறான்.  இங்குள்ள பரசுராம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு திருமுழுக்காட்டு செய்து வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.  பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் பரசுராமர் தன் தாயையே (ரேணுகாதேவியை), ஜமத்கனி முனிவரின் பேச்சை கேட்டு கொன்றார்.  தாயை கொன்ற பாவமும், தோஷமும் நீங்க கோவில் கோவிலாக அலைந்தான். இறுதியில் இந்த கோவிலில்  தான் பரசுராமரின் தோஷம் நீங்கியது.   இங்கு நீராட அவர் உருவாக்கிய குளம் தான் "பரசுராம தீர்த்தம்" எனப்படுகிறது.  இங்குள்ள லிங்கம் மிகச்சிறியது என்பதால் அதனை அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டு இருக்கிறது.  இங்கு இந்த குவளைக்கே அபிஷேகம் நடப்பதாக கூறப்படுகிறது.

பாடியோர் : திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.

அருகிலுள்ள நகரம் : அரியலூர்.

கோயில் முகவரி : ஆலந்துறையார் திருக்கோவில்,

கீழபழுவூர் அஞ்சல் - 621 707, அரியலூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ரோலெக்ஸ் லாட்ஜ் அரியலூர்,

தமிழ்நாடு - 621704.

 

2. எ.எஸ் ரெசிடென்சி,

அரியலூர்.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.பனானா லீப் ஏ/சி ரெஸ்டாரன்ட் ஆபீஸ்,

மின் நகர்,

அரியலூர்.

 

2.ரவி ரெஸ்டாரன்ட் ஏ/சி,

செந்துறை ரோடு,

அரியலூர்.

 

3.மாருதி ஹோட்டல்,

திருச்சி ரோடு,

அரியலூர்,

Ph : 04329-222622.

 

4.ஸ்ரீ முனியாண்டி விலாஸ்,

மார்க்கெட் ஸ்ட்ரீட்,

அரியலூர்,

Ph : 04329-221458.

 

5.ஸ்ரீ ஆரியபவன்,

மார்க்கெட் ஸ்ட்ரீட்,

அரியலூர்,

Ph : 04329-221450.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கலியபெருமாள் 
16.5km

மதுரகாளியம்மன் 
39.2km

பயரணீஸ்வரர்
31.9km
பிரம்மபுரீஸ்வரர்
39.6km
வீரநாராயணபெருமாள் 
47.5Km
பிரகதீஸ்வரர்
48.6km