கூத்தப்பர் காளி கோவில்
திருவெறும்பூர் வட்டம், திருச்சி மாவட்டம்
சுவாமி : கூத்தப்பர் காளி.
தீர்த்தம் : அம்பாள் தீர்த்தம்-காளியாறு,சிவதீர்த்தம்-சிவகங்கை பாதாள கங்கை.
தலவிருட்சம் : மஹா வில்வம்.
தலச்சிறப்பு : உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும், ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள். விஸ்வரூப மஹாகாலீஸ்வரியின் திருப்பாதத்தின் கீழ் உள்ள பதினாறு படிகளும் பதினாறு செல்வங்களாக அமைந்துள்ளது. இத்திருபப்டியின் கீழ் உள்ள அறையில் கால ஜோதி சுடர் வீசிப் பிரகாசிக்கிறது. இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள். சக்தியினுடைய பஞ்ச பேதங்களையும் குறித்து ஐந்து சக்திகளாக பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. இச்சா சக்திமஹாகாலேஸ்வரி, கிரியாசக்தி ப்ரத்யங்கிராதேவி, ஞானசக்தி குஹ்யகாளி, ஞானசக்தியின் திருமுன் ஞானலிங்கம், பராசக்தி சிவமாயாதேவி, ஆதிசக்தி அரூப நிலையில் வனகாளியாகவும் உள்ளனர், அஷ்ட காளிகள் பத்து பைரவர்கள் உள்ளனர்.
பாதாளத்தில் இயற்கையான நீர் ஊற்றில் (பாதாள கங்கையில்) ஜலகண்டேஸ்வரராக உள்ளார். அதிகாரநந்திதேவர், விஷ்ணுநந்திதேவர், தர்மநந்திதேவர் ஆகிய மூன்று நந்திகள் அமைந்துள்ளன. பிரத்யங்கரா தேவியின் கருவறையில் நாகநாதர் வீற்றிருக்கிறார். இவருக்கு கீழே ரிஷி அவர்களின் மகாசமாதி அடையும் இடம் உள்ளது. இங்கு சரபேஸ்வரர், பாரத்யன்கிரா சூலினி துர்கா, ஆகியோருடன் அருள்பாலிக்கின்றார். கால சபையில் கோஷ்டதெய்வங்களாக ஞான தட்சினா மூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா ஆகியோர் அரூபநிலையில் உள்ளார்கள். ஈசான சண்டிகேஸ்வரர் இவ்வாலய அமைப்பிற்கு வழிகாட்டிய குருநாதர் திருமூலத்தேவர் இங்கு அருள்பாளிக்கின்றார். மனிதர்களின் காலத்தை மாற்றி அமைத்து நல்ல காலமாக கொடுக்கக்கூடிய காலச்சக்கர மஹாமேரு உள்ளது. அருகில் காவல் தெய்வங்களாகிய பேச்சியம்மன், பதினெட்டாம் படி கருப்பர், காட்டேரியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளனர். பஞ்சாட்சர மந்திரமே பஞ்சவிமானங்களாக சிவபெருமானுக்கு அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை, மதியம் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருவெறும்பூர்.
கோயில் முகவரி : கூத்தப்பர் காளி கோவில்,
கூத்தைப்பார், திருச்சி மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)