அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

திருப்புறம்பியம், கும்பகோணம் வட்டம்

                      satchi_natha_swamy_temple

 

சுவாமி : அருள்மிகு சாட்சிநாதர்.

அம்பாள் : அருள்மிகு கரும்பன்ன சொல்லி.

மூர்த்தி : அகத்தியர், நால்வர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர், குகாம்பிகை.

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : இத்தல இறைவன் செட்டிப் பெண்ணுக்குச் சாட்சி சொல்லியமையால் சாட்சிநாதர்  எனப் பெயர் பெற்றார்.  இத்தல விநாயகரான பிரளயம் காத்த விநாயகர் கிளிஞ்சல் மண்ணால்  திருமேனி கொண்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி நாளில் இரவு முழுவதும் தேனாபிஷேகம்  நடைபெறும்.  தேன் அனைத்தும் திருமேனியில் இறங்கி விடும்.  வெளியில் தேன் எதும்  வராது.  பிரளய வெள்ளத்தில் இருந்து இத்தலத்தை விநாயகர் காப்பாற்றியதால் கடல் தேவனான வருண  பகவான் கிளிஞ்சல், கடல் நுரை, நத்தான் கூடு ஆகியவற்றை கொண்டு விநயாகரை உருவாக்கி  வழிப்பட்டதால் இவர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.  இங்கு சாட்சி நாதர்  மட்டுமில்லாமல் சட்ட நாத சுவாமியும் எழுந்தருளியிருப்பது சிறப்பு.  சட்ட நாத சுவாமிக்கு என்று  தனிக் கோவில் சீர்காழியில் உள்ளது.  இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று  இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப் பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டு விடும்.  வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு  எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி  நாளில் இரவு முழுவதும் தேனாபிஷேகம் நடைபெறும்.  தேன் அனைத்தும் திருமேனியில் இறங்கி  விடும்.  வெளியில் தேன் எதும் வராது.

தல வரலாறு : ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெரு வெள்ளம் இந்த ஊரை அணுகாமல்  வெளியே நின்றுவிட்டது.  பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம்  என்ற பெயரைப் பெற்றது.  பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்தில் உள்ள  கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த  விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல் நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க  திருப்புறம்பியம் வந்தான்.  மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு  கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லு முன் வணிகன் இத்தல  ஆலயத்திற்கு வந்தான்.  இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான்.  அப்பெண்  சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார்.   பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம்  விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள்.   இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி,  கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார்.  வணிகப் பெண்ணின்  பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்தி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற  பெயர் ஏற்பட்டது.  சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும்  வருகிறது.  மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச்  சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம்.   செட்டிப் பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம்  இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது.  ஆனால் இம்மரம் தலமரமன்று.  தலமரம்  புன்னை மரமே.

வழிபட்டோர் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் :

ஆவணி – விநாயகர் சதுர்த்தி 5 தினங்கள் சிறப்பு வழிபாடு.

மாசி மகத்தில் பிரம்மோற்சவம் கார்த்திகை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்,

திருப்புறம்பியம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் - 612 303.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ஹோட்டல் அழகு 24,

சன்னதி ஸ்ட்ரீட்,

சுவாமிமலை - 612 302,

Ph : +91-99449-09579. 

 

2.இன்டிகோ சுவாமிமலை வில்லா,

6/30 பி ஆக்ராஹரம்,

பாபுராஜபுரம் (போஸ்ட்),

கும்பகோணம் - 612 302.

 

3. ஹோட்டல் சரவண பவன் 25பி & 25சி,

ஜீவரத்தினம் மளிகை,

கிரௌன் தியேடர் அருகில்,

டெய்லி தந்தி அருகில்,

ஆற்காடு ரோடு,

வேலூர் - 632 004.

Ph : 0416 221 7433.

 

4.ஓ.வி.எம் ரிசோர்ட்ஸ் கும்பகோணம்,

கும்பகோணம்.

 

5.வெங்கடராமன் ஹோட்டல்,

கர்ண கொள்ளை ஆக்ராஹரம்,

வலயபேட்டை ஆக்ராஹரம்,

கும்பகோணம்.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் பியூர் வெஜிடேரியன் ஹோட்டல்

எண் 32, சன்னதி ஸ்ட்ரீட்,

சுவாமிமலை,

கும்பகோணம் - 612 302,

Ph : +(91)-9443161929, 7598578257.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
காளஹஷ்தீஸ்வரர் 
9.1km

சுவாமிநாத சுவாமி 
8Km

சுவேத விநாயகர்
9Km
சாரங்கபாணி சுவாமி 
9.3Km
ஆதிகும்பேஸ்வரர் 
9.4Km
எழுத்தறிநாதர் 
3.3Km