அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்

srivilliputhur_vaithyanathaswamy_temple

சுவாமி : வைத்தியநாதசுவாமி.

அம்பாள் : சிவகாமி அம்பாள்.

தலச்சிறப்பு : விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம்.  இத்திருத்தலத்தில் தான்  சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது.  வைத்தியநாத சுவாமியை வழிபட்டால் தீராத  வயிற்றுவலி தீர்ந்து போகும்.  அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும்.  ஒவ்வொரு ஆண்டும்  புரட்டாசி மற்றும் பங்குனி மாதப் பிறப்பு அன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு  சூரிய பூஜை சிறப்பாக நடக்கும்.

தல வரலாறு : முன் காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தன்  மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான்.  இவனது மனைவிக்கு  பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள்.  ஆனால் பத்து மாதம்  முடிவடைந்ததும் தாய் வரவில்லை.  எனவே தானே தன் தாய் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  சிவ பக்தையான அவள், ஈசனே!  காப்பாற்று என அழுது புலம்பினாள்.  இந்த அழு குரலைக் கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன்  கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார்.  அப்போது அந்த  பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது.

தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது.   இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப் பெண்ணும் நீரை பருகினாள்.  இதுவரை  தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரியாது.  இந்த  சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள்.  அதற்குள்  பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது,  வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார்.

அத்துடன், "பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம்.  இந்த தீர்த்தம்  உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன்பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் 'காயக்குடி ஆறு'  என அழைக்கப்படும்.  இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி  சுகபோக வாழ்வை அடைவர்'' என்று அருளினார்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00  மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் :

சிவராத்திரி,

பிரதோஷம்,

அம்மனுக்குரிய செவ்வாய், வெள்ளி, போன்ற நாட்களில் சிறப்பாக நடக்கிறது.

அருகிலுள்ள நகரம் : ஸ்ரீவில்லிபுத்தூர்.

 

கோயில் முகவரி : அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.

 

அருகில் உள்ள தங்கும் இடம்:

 

1.பிரேமா பேலஸ் எ/சி லாட்ஜ்

எண் 47/14, கட்சேரி ரோடு,

மதுரை ரோடு, விருதுநகர் எச்.ஓ, விருதுநகர் - 626 001,

Ph : +(91)-4562-244075, +(91)-9965544075.

2.கே.வி.எஸ் மேன்சன்,

பீடர் ரோடு, விருதுநகர்,

Ph : +(91)-4562-243620.

3.ஹோட்டல் குறிஞ்சி,

கொல்லம், திருமங்கலம் ரோடு,

டி.எஸ்.வி நகர், ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 125.

அருகில் உள்ள உணவகள்:

1.குறிஞ்சி ரெஸ்டாரன்ட்,

ஸ்டேட் ஹைவே 208, கொல்லம் - திருமங்கலம் ரோடு,

வண்ணியம் பட்டி, என்.ஹெச் 208, ஸ்ரீவில்லிபுத்தூர் - 626 125,

Ph : 099949 99511.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (464 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் 
1.4km

சங்கரன்கோவில்
43.3 km