ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோவில்

கும்பகோணம்

adhikambatta-vishwanathaswami_temple


சுவாமி : அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் சுவாமி.

அம்பாள் : அருள்மிகு நிதியம்மை.

தீர்த்தம் : பாலாவி தீர்த்தம், தூமகேது தீர்த்தம்.

தலவிருட்சம் : மல்லிகை.

தலச்சிறப்பு : சோழர்கள் நாணயம் செய்த இடம் கம்பட்டம், எனவே இங்குள்ள சுவாமி தி கம்பட்ட விசுவநாதர் என்ற பெயர் பெற்றார்.  மூர்க்கநாயனார் சூதாடிய இடம்.

தல வரலாறு : முன்பொரு காலத்தில் இத்தலம் இருந்த இடம் காடாக இருந்தது.  இதற்கு மாலதிவனம் என்று பெயர்.  அப்போது உதயகிரி என்ற ஊரில் தூமகேது என்பவர் சிவனிடம் பக்தி கொண்டு முனிவராகி வாழ்ந்து வந்தார்.  ஒருநாள் முக்திக்குரிய தலம் எது என பெரியோரிடம் விசாரிக்க அவர்கள் கும்பகோணம் எனக் கூறினார்.  உடனே சீடருடன் கும்பகோணம் வந்தடைந்தார் தூமகேது.  மகாமக குளத்தில் நீராடி, ஆதி கும்பேஸ்வரரை வழிப்பட்டு பின் தென்மேற்கில் சிறிது தூரம் செல்ல அங்கு மாலதிவனம் இருக்கக் கண்டார். இவ்வனத்தின் உள்ளே தூமகேது செல்ல, அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார்.  ஊள்ளம் உருக கண்ணீர் மல்கி பூஜை செய்ய எண்ணினார்.   நீராட இடம் தேட வருண தீர்த்தம் இருந்தது.  இவ்வாறு பல நாள் செல்ல, ஒரு நாள் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான்.   முனிவரான தூமகேது 'ஐயனே! உலகை காக்கும் ஈசனே' எனக்கெது வேண்டும்.  நீங்கள் சிவலிங்கமாக இவ்விடத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் விசுவநாதர் எனப் பெயர் கொண்டு வணங்குவோர்கெல்லாம் ஆனந்தம் தரும் அம்மை ஆனந்தவல்லி என்றும் பெயர் கொள்ள வேண்டும்.  நான் புதுப்பித்த வருண தீர்த்தம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வேண்ட அவ்வாறே ஆகும் என்ற அருளினார் இறைவன்.  கம்பட்டம் என்ற சொல்லுக்கு சோழர்கள் காலத்தில் தங்க சாலை என்று அர்த்தம். சோழர்கள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்டபோது இங்கு தங்க நாணயம் அச்சடித்தனர்.  எனவே தங்க சாலையில் அதாவது கம்பட்டத்தில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் கம்பட்ட விசுவநாதர் எனப் பெயர் பெற்றார்.

வழிபட்டோர் : தூமகேது.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30.மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் : புரட்டாசியில் நவராத்திரி விழா, மார்கழியில் திருவாதிரை, பங்குனி உத்திர பெருவிழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு அதிகம்பட்ட விசுவநாதர் திருக்கோவில்,

மௌன சுவாமி மடம் அருகில், கும்பகோணம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (464 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
ஆதிகும்பேஸ்வரர் 
700m

ஐரவதேஸ்வரர் 
2.1km

ராமசுவாமி
1km
பகவத் விநாயகர் 
1.2km
சாரங்கபாணி சுவாமி 
1.1km
சோமேஸ்வர சுவாமி 
1km