அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்
ராமநாதீச்சரம், திருவாரூர் மாவட்டம்
சுவாமி : ராமநாதசுவாமி.
அம்பாள் : சரிவார்குழலி.
மூர்த்தி : நந்தியுடன் சோமாஸ்கந்தர்.
தீர்த்தம் : ராம தீர்த்தம்.
தலவிருட்சம் : மகிழம், செண்பகம்.
தலச்சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். சுவாமிக்கு தீபாராதனை செய்யும் போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.
தல வரலாறு : ராமர், சீதையை மீட்க இலங்கை சென்றபோது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இந்த தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவவழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே திரும்பினார். ஒரு மரத்தின் அடியில் சிவன், சுயம்புலிங்கமாக எழுந்தருளி இருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய முயன்றார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அப்போது அம்பாள் தோன்றி, நந்தியை தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, ராமர் சிவபூஜை செய்ய உதவினாள். ராமர் சிவவழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி, "ராமநாதேஸ்வரர்" என்று பெயர் பெற்றார்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் :
மகா சிவராத்திரி,
ஐப்பசியில் அன்னாபிஷேகம்,
கந்தசஷ்டி.
அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
கோயில் முகவரி : அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில்,
ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம் - 609 704, திருவாரூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,
கட்டுகார ஸ்ட்ரீட்,
சந்தமங்களம்,
திருவாரூர் - 610 002,
Ph : 04366 222 082.
2. அருண் ஹோட்டல்,
சந்தமங்களம்,
கே.டி.ஆர். நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 001.
3. ஹோட்டல் காவேரி,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 003.
4. ஹோட்டல் எம்.எம்.எ,
டாக்டர் கலைஞர் நகர்,
மன்னார்குடி ரோடு,
டி.நகர்,
விளாமல்,
திருவாரூர் - 610001,
Ph:04366 220 218.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (465 Votes)