அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோவில் 

திருவெண்காடு

buthan_temple


சுவாமி : அருள்மிகு சுவேதாரண்யேசுவரர்.

அம்பாள் : அருள்மிகு பிரம்மா வித்யாம்பிகை.

மூர்த்தி : சுவேதாரண்யேசுவரர், நடராசர், அகோரமூர்த்தி, முருகன், காளி, துர்க்கை, புதன், அறுபத்து மூவர்.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

தலவிருட்சம் : ஆல், வில்வம், கொன்றை.

தலச்சிறப்பு : வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள பழமையான பதி. காசிக்கு சமமான ஆறுதலங்களுள் இதுவும் ஒன்று.  மூர்த்தி, தீர்த்தம், விருட்சம், ஒவ்வொன்றும் இத்தலத்தில்  மும்மூன்றாக அமைந்துள்ளது.  51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.  சிவன் அகோர மூர்த்தியாக  எழுந்தருளி மருத்துவனை சம்ஹாரம் செய்துள்ளனர்.  கார்த்திகை ஞாயிறு கிழமைகளில் சிறப்பு  வழிபாடு நடைபெறுகிறது. இத்தலத்தில் நடராசப் பெருமான் நவதாண்டவங்களை சகுணமாக  ஆடியுள்ளார்.  திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் வாழ்ந்தும், சிவதீட்சை பெற்றதும்,  சிவஞான போதத்தை அருளிய மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலமே.  சிறுத்தொண்டர் இளமையில்  வாழ்ந்ததும், அவர் திருவெண்காடு நங்கை பிறந்ததும் இத்தலமே.  நவக கிரக தலங்களில் இது  புதன் தலமாகும்.  நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி.  இவரை வழிபடுவதன்  மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும்.  புதனை  வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.

தல வரலாறு : இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.  சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன்,  மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான்.  அந்த சூலத்தால்  நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன்.  இதனால் கோபமுற்ற  சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார்.  ஆனால் மருத்துவனோ நந்தியை  சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது.  பின்னர் சிவபெருமானே  அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.  இன்னும் நந்தியின் சிலையில் ஒன்பது தூவரங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிபட்டோர் : இந்திரன், ஐராவதம், சிவபிரியர், வேதராசி, ஸ்வேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, புதன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், சைவ எல்லப்ப நாவலர்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

புரட்டாசி நவராத்திரி,

கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில் அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு,

மாசியில் இந்திரப் பெருவிழா(10 நாட்கள்).

அருகிலுள்ள நகரம் : சீர்காழி, மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கோவில்,

திருவெண்காடு - 609 114, சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.

தொலைபேசி எண் : 04364 - 256424.

 

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.சோழா இன்,

105, பிடாரி சவுத் ஸ்ட்ரீட்,

தென்பதி,

சிர்காழி - 609 111,

Ph : 094444 93388.

 

2.ஐயர்பாடி ஹோட்டல்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

3.ஹோட்டல் ஆர்யபவன்,

ஓல்ட் என்.ஹெச்,

திருவள்ளுவர் நகர்,

தென்பதி,

சீர்காழி - 609 111.

 

4.மங்கள விலாஸ் ஹோட்டல்,

தென்பதி,

சீர்காழி.

 

5.கணேசன் ஹோட்டல்,

சீர்காழி.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

 

1.சம்பூர்ணா ரெஸ்டாரன்ட்,

ஓல்ட் என்.ஹெச்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

2.கார்டன் ரெஸ்டாரன்ட்,

தென்பதி,

சீர்காழி - 609 110.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (464 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கேது ஸ்தலம் 
8km

அமிர்தநாராயண பெருமாள் 
17.8km

வைதீஸ்வரன் கோவில் 
15.2km
சுயம்பு நாதா சுவாமி 
40.5km
லலிதாம்பிகை 
42.7km
ஆதிசேசதீர்த்தம் 
46.7km